தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை நீக்க வேண்டும், என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியதற்கு, பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை பா.ஜ.க மாநகர் மாவட்ட பழங்குடியினர் அணி செயற்குழு கூட்டம், கொடிசியா அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின், அக்கட்சியின் மாநில துணை தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அதிமுக, பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, எனத் தெரிவித்த அண்ணாமலை, முதல்வர் வேட்பாளர் முடிவை, பாஜக தேசிய தலைமை தான் அறிவிக்கும் என்று, பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாக தெரிவித்தார். புகழேந்தி உட்பட அதிமுக நண்பர்கள் கவனத்துடன் பேச வேண்டும், எனவும் அண்ணாமலை தெரிவித்தார். கூட்டணியில் பா.ஜ.க மாநில தலைமை எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தவில்லை, எனவும் அண்ணாமலை கூறினார்.
செய்தியாளர் சந்திப்புக்கு பின்னர் பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, பழங்குடியினருடன் இணைந்து நடனம் ஆடினார்.







