1 மில்லியன் டாலர் வைர மோசடி; நீரவ் மோடியின் சகோதரர் மீது குற்றச்சாட்டு!

பஞ்சாப் நேஷ்னல் வங்கி நிதி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளில் ஒருவரான நீரவ் மோடியின் சகோதரர் நேஹால் தீபக் மோடி சுமார் 10 லட்சம் டாலர் வைர மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புதிய குற்றச்சாட்டு…

பஞ்சாப் நேஷ்னல் வங்கி நிதி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளில் ஒருவரான நீரவ் மோடியின் சகோதரர் நேஹால் தீபக் மோடி சுமார் 10 லட்சம் டாலர் வைர மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புதிய குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி ரூயாய் அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பியோடினார். இதனிடையே தலைமறைவாக இருந்த அவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 19ம் தேதி லண்டனில் கைது செய்யப்பட்டு வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் நீரவ் மோடியின் சகோதரர் நேஹால் தீபக் மோடியும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேஹால் தீபக் மோடி, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள எல்.எல்.டி டைமண்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்து சாதகமான கடன் விதிமுறைகள் மற்றும் சரக்குகளின் அடிப்படையில் 2.6 மில்லியன் டாலர் மதிப்புள்ள வைர கற்கள் பெற முறைகேடான ஆவணங்களை தாக்கல் செய்ததாக கடந்த 18 ஆம் தேதி அமெரிக்காவின் மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் அலுவலகத்தில் இருந்து ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி வாங்கிய வைரங்களை தனிப்பட்ட தேவைக்காக நிஹல் மோடி விற்பனை செய்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply