எம்.ஜி.ஆரின் அழகுக்கு அருகில் முடிந்தவரை என்னை அழைத்து சென்றவர் – மேக்கப் கலைஞருக்கு அரவிந்த் சாமி நன்றி!

எம்.ஜி.ஆரின் கதாப்பாத்திரத்துக்காக தனக்கு மேக்கப் போட்ட நபருக்கு நடிகர் அரவிந்த் சாமி நன்றி தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை ’தலைவி’ என்ற பெயரில் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக…

எம்.ஜி.ஆரின் கதாப்பாத்திரத்துக்காக தனக்கு மேக்கப் போட்ட நபருக்கு நடிகர் அரவிந்த் சாமி நன்றி தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை ’தலைவி’ என்ற பெயரில் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆர் கதாப்பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். இருவரது ஃபர்ஸ்ட் லுக்கும் ஏற்கெனவே சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. குறிப்பாக அரவிந்த் சாமியின் லுக் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் தலைவி படத்துக்கான அரவிந்த் சாமியின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தனது மேக்கப் கலைஞருக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். அதில், ‘புரட்சி தலைவரின் அழகுக்கும், வசீகரத்துக்கும் எவ்வளவு அருகில் என்னை கொண்டு செல்ல முடியுமோ, அந்த அளவுக்கு கொண்டு சென்ற மேக்கப் கலைஞர் ரஷித்துக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.

தலைவி படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்து விட்டு, இறுதிகட்ட பணிகளை தீவிரப்படுத்த படக்குழு முடிவெடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply