கேரள உள்ளாட்சித் தேர்தல்: ஒரு ஓட்டில் பாஜகவிடம் தோல்வியடைந்த காங்கிரஸ் மேயர் வேட்பாளர்!

கேரளாவில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்…

கேரளாவில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அதற்கு முன்னோட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தேர்தலில் ஆளும் சிபிஐ தலைமையிலான LDF, காங்கிரஸ் தலைமையிலான UDF மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது.

இதனிடையே கொச்சி நகராட்சித் தேர்தலில் North Island வார்டில் UDF கூட்டணியின் மேயர் வேட்பாளரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேணுகோபால் பாஜக வேட்பாளரிடம் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார்.

கொச்சி நகராட்சித் தேர்தலில் வேணுகோபால் தோல்வியடைந்தது காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply