10 நிமிடங்களில் 100% சார்ஜ் ஏறும் பேட்டரி: எலக்ட்ரிக் வாகனங்களின் யுகம் தொடக்கம்?

10 நிமிடங்களில் சார்ஜ் ஏறிவிடும் பேட்டரியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது ஆட்டோமொபைல் துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எதிர்காலத்தில் பேட்டரியால் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் இருக்கப்போகிறது…

10 நிமிடங்களில் சார்ஜ் ஏறிவிடும் பேட்டரியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது ஆட்டோமொபைல் துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எதிர்காலத்தில் பேட்டரியால் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் இருக்கப்போகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இருப்பினும் பேட்டரி வாகனங்கள் பயணிக்கும் தூரம் என்பது குறைவாகவே இருக்கும் அதே போன்று பேட்டரி சார்ஜ் ஆகவும் மணிக்கணக்கில் நேரம் எடுத்துக்கொள்ளும் என்பது இந்த வாகனங்கள் மீதான குறையாக பார்க்கப்படுகிறது. இதனை சரிசெய்து பேட்டரி வாகனங்களை அனைவரும் பயன்படுத்தும் நிலைக்கு எடுத்துச் செல்லத் தேவையான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான டொயோட்டா 10 நிமிடங்களில் 0-100% முழுமையான சார்ஜை எட்டிவிடுவுதுடம், ஒரு சார்ஜில் 500கிமீ பயணிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது. 2021ல் இதன் ஃபுரோடோடைப்பை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

ஒட்டுமொத்த எலக்ட்ரிக் வாகனங்களில் தலையெழுத்தையே தீர்மானிக்கும் வகையிலான இந்த பேட்டரி குறித்த எதிர்பார்ப்பு இப்போதே எகிரத் தொடங்கியிருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply