இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்! – மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

புதியவகை கொரோனா தொற்று பரவிவரும் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய பயணிகளின் நிலையை கண்காணிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் பிரிட்டனில் இருந்து தமிழகம், மகாராஷ்டிரா…

புதியவகை கொரோனா தொற்று பரவிவரும் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய பயணிகளின் நிலையை கண்காணிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியில் காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் பிரிட்டனில் இருந்து தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு திரும்பி கொரோனா தொற்று உறுதியான பயணிகளின் நிலை குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதியவகை கொரோனா தொற்று இந்தியாவில் பரவுவது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்புபவர்களின் நிலையை தொடர்ந்து கண்காணிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ராஜேஷ் பூஷன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply