அண்டார்டிகாவில் முதல்முறையாக 36 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சில நாடுகளில் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்படாத ஒரே கண்டமாக அண்டார்டிகா இருந்து வந்தது.
இந்நிலையில் அண்டார்டிகாவில் 36 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு ஆராய்ச்சி பணியில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். அதில் சிலி நாட்டை சேர்ந்த நபருக்கு கொரோனா பாதிப்பு முதல்முறையாக உறுதியாகியுள்ளது. மொத்தமாக பாதிக்கப்பட்ட 36 பேரில் 26 பேர் ராணுவ வீரர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு மக்கள் தொகை குறைவாகவே காணப்படுவதால் பரவல் அதிகமாக இருக்க வாய்ப்பில்லை என கூறுகின்றனர்.







