சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முன் பா.ம.க. தலைவர் அன்புமணி ராம்தாஸ் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
“சட்டமன்றத்தில் 110வது விதியின் கீழ் முதலமைச்சர் குறைந்தபட்ச ஆதரவு விலையாக சாதாரண நெல்லுக்கு ரூ. 2600, உயர்ரக நெல்லுக்கு ரூ.2750 அறிவித்து இருப்பது போதுமானது கிடையாது. தவெக ஆட்சிக்கு வரும் முன் ரூ.3500 தருவதாக சொன்னார்கள். மத்திய அரசு குவிண்டால் ரூ.2441 என தமிழக அரசுக்கு தருகிறது. திமுக ஆட்சியில் ஊக்க தொகையாக ரூ.131 தந்தார்கள். ஆனால் தவெக அரசு வந்து வெறும் ரூ.28 தான் உயர்த்தி இருக்கிறார்கள். உயர்ரக அரிசியை 5 சதவீதம் தான் தமிழக அரசு கொள்முதல் செய்கிறது. சாதாரண ரக அரிசியை தான் 95 சதவீதம் கொள்முதல் செய்கிறது. சாதாரண ரக ஊக்கத் தொகையை உயர்த்த வேண்டும். ஒடிசா மாநிலத்தில் ரூ.800 ஊக்க தொகையாக தருகிறார்கள். கேரளாவில் ரூ.650 ஊக்கத் தொகை தருகிறார்கள். தமிழகத்தில் ரூ.159 தான் தருகிறார்கள். இந்த கூட்டத்தில் மேலும் ரூ.400 சேர்ந்து குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் தர வேண்டும். அடுத்த ஆண்டு ரூ.3500 ஆக உயர்த்த வேண்டும். கரும்புக்கு கடந்த ஆண்டை விட ரூ.709 கூடுதலாக தந்து ரூ.4 ஆயிரம் என அறிவித்தை வரவேற்கிறோம். இந்த ஆண்டு கரும்புக்கு ரூ. 4500 ஆகவும் அடுத்தாண்டு ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்த வேண்டும்.
ஆவின் பால் பற்றாக்குறை சென்னையில் அதிகமாக உள்ளது. ஆவின் பாலை தான் குழந்தைகள், முதியவர்கள் அருந்து கின்றனர். கலப்பட இல்லாத பால் என்பதால் டாக்டர்கள் பரிந்துரை செய்கின்றனர். 2022-23 ஆண்டு 43 லட்சம் லிட்டர் ஒரு நாளுக்கு கொள்முதல் செய்தனர். ஆனால் தற்போது நாளுக்கு 23 லட்சம் லிட்டர் தான் உள்ளது. கொள் முதல் விலையை அதிகரித்து தர வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.




