சட்டப்பேரவை தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிற்கு ஏற்கெனவே ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இத்தொகுதிகளில் களமிறங்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
1.மதுராந்தகம்_ (தனி) மல்லை சத்யா மதிமுக துணை பொதுச் செயலாளர், 2.வாசுதேவநல்லூர் (தனி )மருத்துவர் சதன் திருமலைக்குமார் உயர்நிலை குழு உறுப்பினர்.
அரியலூர் _வழக்கறிஞர் சின்னப்பா அரியலூர் மாவட்ட செயலாளர்,
சாத்தூர் சாத்தூர் _ மருத்துவர் ரகுராம் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர்,
மதுரை தெற்கு – பூதூர் பூமிநாதன் மதுரை மாநகர மாவட்ட செயலாளர்.
பல்லடம் _ முத்து ரத்தினம். மதிமுக திருப்பூர் மாவட்ட துணை செயலாளர்
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.







