பிரிட்டனில் ஊரடங்கின்போது முதியவர் ஒருவர் தனக்கு பிடித்த உணவுத் தேடி ஹெலிகாப்டரில் அதிக தூரம் பயணித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரிட்டனில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி அந்நாட்டு பெண் ஒருவர் 160 கி.மீ தூரம் பயணித்து மெக்டொனால்டுக்கு சென்று தனக்கு மிகவும் பிடித்த பர்கரை (BURGER) வாங்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையினர் தொற்றுநோய்க்கு மத்தியில் அத்தியாவசியமற்ற பயணத்தை மேற்கொண்டதற்காக அப்பெண்ணிற்கு அபராதம் விதித்தனர்.
இதேபோல், சமீபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த முதியவர் ஒருவர், 130 கி.மீ தூரம் பயணித்து, பண்ணை அங்காடி ஒன்றுக்கு ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். அங்கு தனக்கு பிடித்த உணவான சாண்ட்விச்சை பார்சல் வாங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அந்த கடையின் உரிமையாளர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி உணவு பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.







