தமாகா போட்டியிடும் தொகுதி பட்டியல் வெளியீடு!

சட்டப்பேரவை தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரசின் தொகுதி பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது எந்தெந்த…

சட்டப்பேரவை தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரசின் தொகுதி பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது எந்தெந்த தொகுதிகள் என்பது உறுதி செய்யப்பட்டு அதற்கான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி லால்குடி, தூத்துக்குடி, கிள்ளியூர், திருவிக நகர், பட்டுக்கோட்டை, ஈரோடு கிழக்கு ஆகிய தொகுதிகளில் தமாகாவினர் போட்டியிடுகின்றனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக, திமுக கட்சிகள் தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கா தொகுதிகளை உறுதி செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கூட்டணிக்கட்சிகள் தங்கள் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றன. லால்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் களமிறங்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது லால்குடி தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.