ஆசியாவின் டாப் 20 பணக்கார குடும்பங்களின் பட்டியலை ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ளது.
மொத்தமாக 463 பில்லியன் டாலர் சொத்து அவர்களது வசம் இருக்கிறது. குறிப்பாக முகேஷ் அம்பானி குடும்பத்தினர் அதிக அளவிலான சொத்துக்களுக்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றனர்.
கொரோனா காலத்தில் பல்வேறு நிறுவனங்கள் கடும் பொருளாதார சரிவை சந்தித்த போது, ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஏராளமான முதலீடுகள் குவிந்தன. இதன் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலிலும் அவரது நிலை உயர்ந்தது. தற்போது ஆசியாவின் பணக்கார குடும்பங்கள் பட்டியலில் அவர் இடம்பிடித்துள்ளார். அவரது பிள்ளைகள் அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைக்கழகங்களில் தங்கள் படிப்பை முடித்தனர். அவர்கள் தற்போது தங்கள் குடும்பத்தின் தொழில்களிலும் அதிக ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள ஹாங்காங்கை சேர்ந்த Kwoks ஐ ஒப்பிடுகையில், அம்பானி குடும்பத்தினரிடம் இரண்டு மடங்கு சொத்து அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முதல் தலைமுறை சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதனால்தான் சீனாவை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் சிலரது பெயர்கள் இதில் இடம்பெறவில்லை.
திருபாய் அம்பானி 2002ம் ஆண்டு உயிரிழந்த பிறகு அவரது மகன்கள் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி இருவரும் பொறுப்பேற்றனர். எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பிசினஸ் முகேஷ் அம்பானியிடமும், தொலைத்தொடர்பு உள்ளிட்ட சில பகுதிகள் அனில் அம்பானியிடமும் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.







