Zomato நிறுவனத்திடம் போக்குவரத்து காவல்துறை விளக்கம் கேட்க முடிவு

10 நிமிடத்திற்குள் டெலிவரி செய்யப்படும் என்ற ஜொமேட்டோ நிறுவனத்தின் அறிவிப்புக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க சென்னை போக்குவரத்து காவல்துறை முடிவு செய்துள்ளது. உணவு டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான…

10 நிமிடத்திற்குள் டெலிவரி செய்யப்படும் என்ற ஜொமேட்டோ நிறுவனத்தின் அறிவிப்புக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க சென்னை போக்குவரத்து காவல்துறை முடிவு செய்துள்ளது.

உணவு டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சோமாட்டோ நிறுவனம் சோமாட்டோ இன்ஸ்டன்ட் என்கிற பெயரில் பத்து நிமிடங்களுக்குள் உணவு டெலிவரி செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக நிறுவனர் தீப்பிந்தர் கோயல் நேற்று முன் தினம் தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல் துறையிடம் கேட்டபொழுது இந்த அறிவிப்பு தற்போது நடைமுறைக்கு வரவில்லை, எனினும் எதிர்காலத்தில் இந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்பதை அந்நிறுவனத்திற்கு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/deepigoyal/status/1506142916045328390

மேலும், டெலிவரி செய்யும் நபர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடாமல் இருப்பது தொடர்பாக சோமாட்டோ நிர்வாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்த இருப்பதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்து அதனால் ஏதும் விபத்து ஏற்பட்டால் அந்தக் குற்றத்திற்கு சட்டபடி அந்த நிறுவனமும் உடந்தை என்பதையும் விளக்கிக் கூறுவோம் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.