கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி; அமைச்சர் பெரியசாமி விளக்கம்

தமிழ்நாட்டில் நகைக்கடன் தள்ளுபடிக்காக நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.1,000 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் மற்றும் அதற்கும் கீழ் நகைகளை அடகு வைத்தவர்களின்…

தமிழ்நாட்டில் நகைக்கடன் தள்ளுபடிக்காக நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.1,000 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் மற்றும் அதற்கும் கீழ் நகைகளை அடகு வைத்தவர்களின் நகைக்கடன் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என்று கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்றுவரும் நிலையில் தமிழ்நாட்டில் நகைக்கடன் தள்ளுபடிக்காக நேற்று ஒரே நாளில் ரூ.1,000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழ்நாட்டில் நகைக்கடன் தள்ளுபடிக்காக நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.1,000 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 5,48,000 தகுதியான நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், மார்ச் 31-ம் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி ரசீது கொடுக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், வரும் 28-ம் தேதியே தகுதியான நபர்களுக்கு ரசீது கொடுத்து முடிக்கப்படும் என்று நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.