கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் நாளை முதல் கட்டுப்பாடுகள் முழுமையாக திரும்பப் பெறப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே, முதலமைச்சர் உத்தவ் தாக்ரே தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், கொரோனா கட்டுப்பாடு தளர்வுகள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மராத்தி புத்தாண்டான வரும் 2-ம் தேதி முதல் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும், நோய் தொற்று தடுப்பு சட்டம் மற்றும் பேரழிவு மேலாண்மை சட்டம் ஆகியவற்றின் கீழான கட்டுப்பாடுகளும் வாபஸ் பெறப்படுவதாக தெரிவித்தார். விருப்பம் உள்ளவர்கள், தாங்களாக முன்வந்து முகக்கவசம் அணியும் நடைமுறை நாளை முதல் அமல்படுத்தப்படும் என்றும் மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.
All COVID restrictions in Maharashtra will be lifted, as we bring in the new year this Gudi Padwa!
— CMO Maharashtra (@CMOMaharashtra) March 31, 2022
கொரோனா தொற்று குறைந்ததையடுத்து மத்திய அரசும் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்ளுமாறு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
மேலும், வருகிற ஜூலை மாதத்தில் கொரோனா நாங்காவது அலை படையெடுக்க கூடும் என மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமனியன் கூறியது குறிப்பிடத்தக்கது.