அதிக லைக்ஸ் ஆசை: எல்லை மீறிய யூடியூபர் கைது

ரயிலில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டதாக கிராபிக்ஸ் மூலம் மாற்றி, வீடியோ வெளியிட்ட யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையை சேர்ந்தவர் இர்பான் கான். யூடியூபில் அதிக பாலோயர்களை கொண்டுள்ள இவர், அடிக்கடி பரபரப்பான செய்திகளை…

ரயிலில் விழுந்து உயிரை மாய்த்துக்
கொண்டதாக கிராபிக்ஸ் மூலம் மாற்றி, வீடியோ வெளியிட்ட யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையை சேர்ந்தவர் இர்பான் கான். யூடியூபில் அதிக பாலோயர்களை கொண்டுள்ள இவர், அடிக்கடி பரபரப்பான செய்திகளை வெளியிட்டு அதிக வியூஸ் அள்ளுவாராம். இந்நிலையில் இன்னும் அதிக லைக்ஸ்களை பெறுவதற்காக, உயிரிழப்பு  நாடகமா டியுள்ளார்.

அதாவது மும்பையில் உள்ள பாந்த்ரா – கர் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே தண்டவாளத்தில் அமர்ந்து வீடியோ எடுத்த அவர், பிறகு கிராபிக்ஸ் மூலம் ரயிலில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டது போல மாற்றியுள்ளார். இந்த வீடியோவை அவர் யூடியூப்பில் நேற்று பதிவேற்றியுள்ளார்.

அதைப் பார்த்த பலர் அதிர்ச்சியடைந்தனர். சிலர் அதை ட்விட்டரில் பகிர்ந்தனர். அதைக்கண்ட போலீசார், இர்பான் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அந்த வீடியோவை நீக்கிய அவர், பாலோயர்களிடமும் போலீசிடமும் மன்னிப்புக் கேட்டுள்ளார். உயிரிழப்பு எதற்கும் தீர்வல்ல என்று கூறி மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டார். இந்நிலையில் அவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.