முக்கியச் செய்திகள் விளையாட்டு

இந்திய அணி பேட்டிங்: வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு, முதல் பந்தில் பிருத்வி ஷா அவுட்!

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. முதல் பந்திலேயே பிருத்வி ஷா ஆட்டமிழந்தார்.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, மூன்றாவது போட்டியில் தோல்வி கண்டது.

இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் போட்டி, இன்று தொடங்கியுள்ளது. இந்திய அணியில் அறிமுக வீரர்களாக பிருத்வி ஷா, தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழல்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிற பிருத்வி ஷாவுக்கு இதுதான் முதல் டி-20 போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால், இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியுள்ளது. பிருத்வி ஷாவும் ஷிகர் தவானும் களமிறங்கினர். சந்தித்த முதல் பந்திலேயே பிருத்வி ஷா ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். சமீரா வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் மினோத் பனுகாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து கேப்டன் ஷிகர் தவானுடன் சஞ்சு சாம்சன் இணைந்துள்ளார். இருவரும் ஆடி வருகின்றனர்.

அணி விவரம்:

இந்தியா: ஷிகர் தவான் (கேப்டன்), பிருத்வி ஷா, இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, குணால் பாண்ட்யா, தீபக் சாஹர், புவனேஸ்வர்குமார், சாஹல், வருண் சக்கரவர்த்தி.

இலங்கை: துசன் ஷனகா (கேப்டன்), அவிஸ்கா பெர்னாண்டோ, மினோட் பனுகா, தனஞ்செய டி சில்வா, சரித் அசலங்கா, அஷன் பண்டாரா, வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, இசுரு உதனா, அகிலா தனஞ்செயா, துஷ்மந்தா சமீரா .

Advertisement:
SHARE

Related posts

ஆக்சிஜன் சிலிண்டர் வெடிப்பு : 82 பேர் உயிரிழப்பு!

Ezhilarasan

தினசரி தடுப்பூசி செலுத்தும் விகிதம் அதிகரிப்பு

Saravana Kumar

முதல் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுற்றது!

Ezhilarasan