முக்கியச் செய்திகள் குற்றம்

சென்னையில் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை!

சென்னையில் இளைஞர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோபால் நகரை சேர்ந்தவர் 23 வயதான அஜித்குமார். இவர் அப்பகுதியில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த அவரை நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் பின் தொடர்ந்துள்ளனர். அப்போது, திடீரென மர்ம கும்பல் கத்தியை எடுத்து அஜீத்குமாரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இரத்த வெள்ளத்தில் கிடந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் திருவிக நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்தக் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலைக்கான காரணம் காதல் விவகாரமா அல்லது வேறு ஏதேனும் முன்பகையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டிடிவி தினகரன் விடுவிப்பு ; அதிமுகவில் சலசலப்பு

Web Editor

அமெரிக்க விமானத்தில் பிறந்த குழந்தைக்கு சென்டிமென்ட் பெயர் வைத்த ஆப்கான் பெற்றோர்!

Gayathri Venkatesan

அசானி புயல்: 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து

Halley Karthik