மொழியின் பெயரால் அரசியல் செய்வதை இளைஞர்கள் விரும்பவில்லை என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
இந்தியத் தேசியவாதியும், மெய்யியலாளரும், ஆன்மிகத் தலைவரும், கவிஞருமான
அரவிந்தரின் 150வது பிறந்த நாள் விழா புதுச்சேரியில் நடைபெற்றது. புதுச்சேரி
கம்பன் கலையரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆரோவில் நிர்வாகக்குழு தலைவரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி, நிர்வாகக்குழு உறுப்பினரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிகழ்ச்சியில் அரவிந்தரின் உருவப்படம் பொறித்த நாணயம் மற்றும் தபால்
தலையினை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளிகாட்சி மூலமாக வெளியிட்டார். தொடர்ந்து விழா நடைபெறும் கம்பன் கலையரங்கில் அறிமுகம் செய்யபப்ட்டது.
அதை தொடர்ந்து காணொளிகாட்சி மூலமாக பிரதமர் மோடி பேசும்போது, இன்று தேசத்தில் ஒரு வரலாற்று முக்கிய முக்கியமான ஒரு தினமாக இந்த தினத்தை இந்திய தேசத்தில் வாழ்கிற நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இந்த வரிசையில் புதுச்சேரி மண்ணில் குறிப்பாக அரவிந்தரின் நினைவை போற்றுகிற விதத்தில் ஒரு நினைவு நாணயமும் அஞ்சல் தலையையும் வெளியிடப்பட்டுள்ளது என்றும்
கொடுக்கும். இந்த மாதிரியான அரவிந்தரின் யோக சக்தி என்பது ஒரு சமூக சக்தி என்பது மட்டுமல்ல அது அனைவரையும் இணைக்கும் சக்தியாகும். நான் சில தினங்களுக்கு முன்பு காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்க கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு அமைந்தது. அந்த காசி தமிழ் சங்க நிகழ்ச்சியில் இன்றைய இளைஞர்கள் தமிழ் இளைஞர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை பார்க்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. மொழியின் பெயரால் அரசியல் செய்வதை இளைஞர்கள் விரும்பவில்லை என அவர் பேசினார்.
இன்றைய பாரத இளைஞர்கள் அரவிந்தரின் சக்தியை உணர்ந்து இன்றைய பாரதத்தினுடைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அந்த உணர்வுகளை தாங்கி நாம் இந்தியாவில் உள்ள சவால்களை எதிர்கொள்வோம் என பேசினார்.