“உங்கள் குரல் என்றும் வாழும்” – ஜானகி மறைவுக்கு நடிகை திரிஷா இரங்கல்!

நடிகை திரிஷா மறைந்த ஜானகி அம்மாவுடன் இருக்கும் அரிய புகைப்படங்களைப் பகிர்ந்து, கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகியான எஸ். ஜானகி(88), வயது மூப்பு காரணமாக நேற்று மைசூருவில் காலமானார். கடந்த சில மாதங்களாகவே அவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று அவரது உடல்நிலை மோசம் அடையவே உடனடியாக மைசூருவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜானகிக்கு சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் ஜானகியின் உடல் இன்று பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகை திரிஷா மறைந்த ஜானகி அம்மாவுடன் இருக்கும் அரிய புகைப்படங்களைப் பகிர்ந்து, கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவில், “என்னுடைய மிகச் சிறப்பு வாய்ந்த திரைப்படங்கள் ஒன்றில் உங்கள் பெயரைத் தாங்கி நடிப்பது, என் வாழ்நாளின் மிகச்சிறந்த பெருமைகளில் ஒன்றாக என்றும் இருக்கும். ஆனால், உங்களை அறிந்திருப்பதும், உங்கள் அன்பைப் பெற்றிருப்பதும் நான் என்றென்றும் நெஞ்சாரப் போற்றும் ஒன்று. உங்கள் கட்டியணைப்புகளுக்கும், உங்கள் கனிவிற்கும், உங்கள் சிரிப்பிற்கும் மற்றும் ‘மிகச்சிறந்த கலைஞர்கள் தான் மிகவும் எளிமையான மனிதர்கள்’ என்பதை எனக்கு எப்போதும் நினைவூட்டியதற்கும் நன்றி. உங்கள் குரல் என்றும் வாழும். அமைதியாக ஓய்வெடுங்கள் ஜானகி அம்மா உங்களை நான் மிகவும் இழந்து தவிக்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.