ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று அதிகாலை லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது.
இது குறித்த தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “இந்த நிலநடுக்கம் அதிகாலை 2 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அதிகாலை 2 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இதேபோல் கடந்த பிப்ரவரி மாதமும் பாரமுல்லா மாவட்டத்தில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட அதிர்வால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.




