தாய்லாந்து : மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு!

பாங்காக்கின் வடக்குப் பகுதியில் உள்ள மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கின் வடக்குப் பகுதியில் உள்ள பிரபலமான மதுபான விடுதி ஒன்றில் நள்ளிரவு திடிர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் சென்றபோது அங்கிருந்த வாடிக்கையாளர்கள் தீப்பிழம்புகளால் சூழப்பட்டிருந்த கட்டடத்தின் முதன்மை வாயில் வழியாக அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 63 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து தாய்லாந்து பிரதமர் அனுடின் சான்விராகுல் தீ விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டுள்ளார். அப்போது, தீ விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் அது தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கோர விபத்தின் பின்னர் அங்கு வந்திருந்த பலரைக் காணவில்லை எனவும் இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகின்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.