மதுரையில் ஆம்னி பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு!

மதுரையில் ஆம்னி பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வஞ்சிநகரம் நான்கு வழிச்சாலையில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த அரசு பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நான்கு ஆண்கள் உட்பட ஒரு பெண் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் விபத்தில் காயம் அடைந்த 41 பேர் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாதி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சரக டிஐஜி அபினவ் குமார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதன் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் பார்வையிட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.