இன்று மாலை வெளியாகிறது ‘ட்ரெயின்’ படத்தின் இசை மற்றும் டீசர்!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ல ட்ரெயின் படத்தின் இசை & டீசர் இன்று மாலை வெளியாகிறது.

இயக்குநர் மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் ‘ட்ரெயின்’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ் தானுவின் ‘வி க்ரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் ஸ்ருதிஹாசன், நரேன், நாசர், கே.எஸ்.ரவிக்குமார், டிம்பிள் ஹயாதி, யுகி சேது, கலையரசன், இரா.தயானந்த் மற்றும் ப்ரீத்தி கரண் ஆகியோர் நடித்துள்ளனர். ஃபௌசியா ஃபாத்திமா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீ வாட்சன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். மிஷ்கின் இப்படத்தை இயக்கியதுடன் இசையமைத்தும் உள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு இப்படத்தின் படபிடிப்பு தொடங்கியது. பல்வேறு காரணங்களுக்காக இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. சவால் நிறைந்த CG பணிகள் உள்ளதே கால தாமதமானதற்கு காரணம் என தயாரிப்பாளர் எஸ்.தானி தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் ‘கன்னக்குழிக்காரா’ பாடல் வெளியாகியது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் மற்றும் இசை இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.