குற்றம்தமிழகம்செய்திகள்

காரைக்காலில் இருந்து நாகைக்கு கடத்தப்பட்ட 197 மதுபாட்டில்கள் பறிமுதல் – ஒருவர் கைது!

நாகூர் புறவழி சாலையில் நடைபெற்ற சோதனையில் காரைக்காலில் இருந்து நாகைக்கு கடத்திவரப்பட்ட 197 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாகப்பட்டினத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, வாஞ்சூர் பகுதியில் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வாஞ்சூர் சோதனைச் சாவடி வழியே புதுச்சேரி மாநிலம், காரைக்காலிருந்து வந்த இருசக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்தபோது, இருசக்கர வாகனத்தில் 180 மில்லி அளவுள்ள 197 மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, மதுகடத்தலில் ஈடுபட்ட சேர்ந்த ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடமிருந்து 197 மதுபாட்டில்களையும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய  இரண்டு இருசக்கர வாகனத்தையும் போலீசார் கைப்பற்றினார்.
இதேபோல், நாகூர் புறவழிச் சாலையில் நடைபெற்ற வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தை மறித்த போது வாகனத்தை விட்டு விட்டு மர்மநபர் தப்பி ஓடியதையடுத்து, இரு சக்கர வாகனத்தில் இருந்த 750 மில்லி அளவு கொண்ட 15 மது பாட்டில்கள் மற்றும் 180 மில்லி கொண்ட 85 புதுச்சேரி சாராய பாட்டில்களையும் காவல்துறையினர் கைப்பற்றினர். இது குறித்து வழக்கு பதிவு செய்த நாகூர் போலீசார், தப்பி ஓடிய குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.
நாகூர் காவல் நிலையத்தில் பிடிப்பட்ட புதுச்சேரி மாநில மது பாட்டில்களை நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் மது குற்றச்சம்பவங்களில் ஈடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
-சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

“விளையாட்டு வீரர்களுக்கான பிரிவிலும் இட ஒதுக்கீடு கட்டாயம்”

Web Editor

தமிழில் பராமரிக்கபட்ட கோப்புகள் : பாராட்டு பெற்ற ஊராட்சி ஒன்றிய உதவியாளர்

Web Editor

சொந்த இடத்தில் வீடு கட்டியவரை அடித்துக்கொன்ற நபர்கள்!

Jeba Arul Robinson

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading