பொன்னமராவதி அருகே பாட்டன் காலத்தில் வழிபாடு செய்து வந்த கோயில் 150 ஆண்டுகளுக்கு பிறகு பேரன்களால் புரனமைப்பு செய்யப்பட்டு, அம்மன்குறிச்சி கிராமத்தில் விமர்சையாக குடமுழுக்கு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசடையப்பசுவாமி, ஸ்ரீநல்லையா சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு விழாவானது நேற்று நடைபெற்றது. பாட்டன்கள் வழிபாடு செய்து வந்த கோயில் 150 வருடங்களுக்கு பிறகு பேரன்மார்களால் கடந்த ஆறு மாதகாலங்களாக புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, பணி நிறைவுற்ற நிலையில், குடமுழுக்கு விழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது.
பல்வேறு புனிதத்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் பல்வேறு கலசங்களில் அடைக்கப்பட்டு யாகசாலையில் வைத்து சிவாச்சாரியார்களால் பூஜிக்கப்பட்டது.
இந்த குடமுழுக்கு விழாவைக்காண கங்காணிபட்டி, அம்மன்குறிச்சி, கருமங்காடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் மேற்க்கொண்டனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டது.பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொன்னமராவதி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் செய்திருந்தனர்.
-சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: