கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மீதிகுடி செங்கமேட்டு தெரு பகுதியில் கனவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தவர் காமாட்சி (25). இவரிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனிடையே சில நாட்களுக்கு முன்பு மகேந்திரன் காமாட்சியின் கூறி கையைப் பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது.
இதனைக் ஆத்திரமடைந்த காமாட்சி மகேந்திரனை காரில் வைத்து செருப்பால் அடித்ததோடு அதை செல்போனில் வீடியோ எடுத்து மகேந்திரனின் குடும்பத்திற்கு அனுப்பி விடுவதாக கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன் காமாட்சியின் வீட்டிற்குள் புகுந்து அவரை வெட்டிக்கொலை செய்துள்ளார். மேலும், காமாட்சியின் தந்தை பாண்டுரங்கனையும் இரும்பு பைப்பால் கொடூரமாக தாக்கிவிட்டு அவர் தப்பி ஓடினார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த அண்ணாமலை நகர் போலீசார் கொலை செய்யப்பட்ட காமாட்சி உடலை மீட்டு கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மகேந்திரனை தேடி வருகின்றனர்.




