டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்றுள்ளன. இதில் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தேஜஸ்வி, உமர் அப்துல்லா, திருமாவளவன், சுப்ரியா சுலே ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தங்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) காங்கிரஸ் கைகோர்த்ததாக கூறி, திமுக தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக ஏற்கனவே அறிவித்து விட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் அடுத்த மாதம் தொடங்கும் நிலையில் அதில் முன்வைக்கப்பட வேண்டிய பிரச்சனைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இந்தியா கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தவெகவுக்கு அழைப்பில்லை. அடுத்தடுத்த கூட்டங்களில் தவெகவை அழைப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.




