அத்தை மகள்கள் பிடிவாதம்: ஒரே நேரத்தில் 2 பேரை மணந்த இளைஞர்!

’அவரைத்தான் திருமணம் செய்வேன்’ என அத்தை மகள்கள் பிடிவாதம் பிடித்ததால், ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்திருக்கிறார் இளைஞர் ஒருவர். தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் கான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுன். ஆசிரியர்…

அவரைத்தான் திருமணம் செய்வேன்’ என அத்தை மகள்கள் பிடிவாதம் பிடித்ததால், ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்திருக்கிறார் இளைஞர் ஒருவர்.

தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் கான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுன். ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் அர்ஜுன், தனது அத்தை மகள்களான சுரேகா மற்றும் உஷாராணியை ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை தொடர்பு கொண்டு காதல் வலை வீசியுள்ளார்.

அத்தையின் இரண்டு மகள்களுமே காதல் வயப்பட்டதைத் தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில் இரு குடும்பத்தாருக்கும் விஷயம் தெரியவந்தது. குடும்பத்தினர் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் இரண்டு அத்தை மகள்களும் பிடிவாதமாக அர்ஜுனனை மணக்க ஆசைப்பட்டனர். இதனால், ஆதிவாசிகளான அவர்களது பாரம்பரியமான வாழ்க்கை முறையை மாற்றி முதல் முறையாக, இரு பெண்களையும் ஒரே மணமகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

இதனை அடுத்து இவர்களது திருமணம் கடந்த வாரம் நடைபெற்றது. இரு மணமகளுக்கு தாலி கட்டிய அவர், தற்போது மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார். மணமகள் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில் ஒரே நேரத்தில் இரு மணமகளை கை பிடித்தது. அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
……………..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.