புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏ ஜான்குமாருக்கு, அமைச்சர் பதவி இல்லை என்ற தகவல் வெளியானதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள், பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில், பாஜக சார்பில் ஜான்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது மகன் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தந்தை – மகன் என இருவரும் வெற்றி பெற்றதால், ஜான் குமாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு அமைச்சர் பதவி இல்லை என தகவல் வெளியானது.
இதனையடுத்து ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள், இந்திரா காந்தி சதுக்கத்தில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
Advertisement: