மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் குறித்து இன்று மக்களைவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது ;
மக்களவையில் நேற்று மகளிர் இடஒதுக்கீடு குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேகவால் போது, தனது மனைவிக்காக ஒரு கவிதையை படித்தார். அதேபோல ஏன் கவிதை படிக்கவில்லை என தனது மனைவி கடிந்து கொண்டதாக மற்றொரு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ இன்று தெரிவித்தார். எனக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் அந்த பிரச்சனை இல்லை. (மக்களவையில் சிரிப்பொலி எழுந்தது.)
2023ம் ஆண்டு பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்ட பின்னர் தற்போதைய மசோதா எதற்கு ? 2023ம் ஆண்டு கொண்டு வந்தது தான் உண்மையான மசோதா. தற்பொதைய மசோதா இந்தியாவின் அரசியல் வரைபடத்தை மாற்றக்கூடிய மசோதா. இந்த நொடியில் உங்களால் 33 சதவீத இட ஒதுக்கீடை கொண்டு வர முடியும் என்றால் அதுதான் உண்மையான மசோதா. இது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு செய்யும் கொடூரமான மன்னிக்க முடியாத ஒரு செயல்பாடு.
பாஜக இதை திட்டமிட்டு செய்கிறது. நீங்கள் இந்திய வரைபடத்தையே மாற்றி அமைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். தென்னிந்தியாவுக்கும், வடகிழக்கு இந்தியாவுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று சொல்கிறீர்கள். ஆனால் இந்த மசோதா மூலமாக தென்னிந்தியர்களின் மக்கள் அதிகாரத்தை நீங்கள் பறிக்கிறீர்கள், எனவே இது தேசவிரோத மசோதா.
பிரதமர் மோடியை “மெஜிசியன்” என்று குறிப்பிட்ட ராகுல்
ஒரு ஊரில் ஒரு மெஜிசியன் இருந்தார். அவரது சோவை பார்க்க 400,500 குழந்தைகள் பார்க்கப் போனார்கள். அந்த மந்திரவாதி தொப்பிக்குள் கைவிட்டு எடுக்கிறார் முயல் வருகிறது. பந்துகளை காற்றில் பறக்கவிட்டு பிடிக்கிறார் எல்லோரும் கைத்தட்டி வரவேற்கிறார்கள். அந்த மந்திரவாதியை அவரது உதவியாளர்கள் முழுமையாக செயினை வைத்து கட்டி விட்டார்கள். ஆனால் அந்த மந்திரவாதியால் வெளியே வர முடியவில்லை அவர் திணறுகிறார். அந்த மந்திரவாதி ஒரு பதற்றத்தில் இருந்ததால் முதல் மேஜிக்கை செய்த பொழுது தவறு செய்து விட்டார். அடுத்தடுத்த அவரது ட்ரீக்குகளும் தோல்வி அடைந்து விட்டது. அது போல தான் இங்கும் நடந்து வருகிறது.
இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாது என்று பா.ஜ.க.வினருக்கு நிச்சயமாக தெரியும். ஆனாலும் பதற்றத்தை வைத்து யாரையாவது எதுவும் செய்ய முடியுமா என பார்க்கிறார்கள். இரண்டு விஷயங்களை அவர்கள் இதை மூலம் செய்யப் பார்க்கிறார்கள். ஒன்று இந்தியாவின் வரைபடத்தை மாற்ற நினைக்கிறார்கள். இரண்டாவது பெண்களின் அதிகாரத்தை பறிக்க பார்க்கிறார்கள். தான் பெண்களுக்கு ஆதரவானவன் என்ற பிம்பத்தை நாட்டு மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார்” என்றார்.
பிரதமர் மோடியை மேஜிசியன் எனக் குறிப்பிட்டு ராகுல் காந்தி பேசியதால் அவையில் கூச்சல் குழப்பம். அப்போது குறுக்கிட்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “நாட்டு மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த ஒரு பிரதமரை இப்படி அவதூறாக பேசுவதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “உங்களைப் பற்றி ஏதாவது பேசினால் உடனடியாக ராணுவ வீரர்கள் பின்னால் ஒளிந்து கொள்கிறீர்கள். நாங்கள் ராணுவ வீரர்களை அவமரியாதை செய்யவில்லை. நீங்கள் மட்டும் இந்திய நாட்டு மக்கள் கிடையாது, நீங்கள் மட்டுமே ராணுவ வீரர்கள் கிடையாது. இந்த மசோதாவை இங்கேயா தோற்கடிப்போம்” என்றார்.
ராகுல் கூறிய புதிர் எண்…
இறுதியாக அவர், 16 என்ற எண்ணை சுட்டிக்காட்டி “விரைவில் உங்களுக்கு இதற்கான பதில் கிடைக்கப் போகிறது” என புதிரான ஒரு விவகாரத்தை கூறி தனது உரையை முடித்தார்







