திருச்சி கிழக்கு மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக திருச்சி சென்றுள்ள முதலமைச்சர் விஜய் அங்கு புனித ஜோசப் கல்லூரியில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பேசியதாவது:
தகுதி வாய்ந்த அதிகாரிகளை காவல் துறையில் நியமித்திருக்கிறேன். என்ன பழி போட்டாலும் உண்மையாக உறுதியாக மக்களுக்குத் தேவையான திட்டங்களை செய்துகாட்டுவேன். அவர்கள்தான் ஆட்சியிலேயே இல்லையே. அவர்களை ஏன் குறை கூறுகிறீர்கள் என்று சிலர் பேசுவார்கள். அவர்களுக்கு தவறு செய்தது யார் என்று எடுத்துக் கூற வேண்டும் இல்லையா? தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் ஒன்றாக சேர்ந்து யாருக்கும் தெரியாமல் மூலையில் அமர்ந்து பேரம் பேசி ஆட்சி அமைத்து கொள்ளை அடிக்க திட்டமிட்டனர்.
நிதி நெருக்கடி ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறீர்கள். அதை சரி செய்ய வேண்டாமா? அதை சரி செய்துவிட்டு பிறகு களத்தில் இறங்குகிறேன். திமுக மாடல் அரசில் ஒரு தெருவிடாமல் போதைப்பொருள் கலாசாரம் கொட்டிக்கிடக்கிறது. இதை முன்பே செய்திருந்தால், பெண்களுக்கு அநீதி நடந்திருக்குமா?. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டு மக்கள் மனதை வெல்ல பார்க்க வேண்டும். அதை விடுத்து மக்களை ஏமாற்ற நினைக்காதீர்கள்.
என்னை வெற்றி பெற வைத்த தமிழக மக்களுக்கும் திருச்சி கிழக்கு மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நம்பிக்கையோடு இருங்கள். வெற்றி நிச்சயம். பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டுமே எனக்கு இரண்டு கண்கள் மாதிரி. திருச்சி கிழக்கு என் செல்லப் பிள்ளை மாதிரி. வரும் இடைத்தேர்தலில் உங்களில் ஒருவரையே வேட்பாளராக நிறுத்தப்போகிறோம். விஜய்யை வெற்றிபெற வைத்ததைப்போல, இடைத்தேர்தலில் நான் முன்னிருத்தும் சாமானியரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
என்னை வெற்றி பெற வைத்த தமிழக மக்களுக்கும் திருச்சி கிழக்கு மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நம்பிக்கையோடு இருங்கள். வெற்றி நிச்சயம்.
இவ்வாறு அவர் பேசினார்.







