திருச்சி கிழக்கு மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக திருச்சி சென்றுள்ள முதலமைச்சர் விஜய் அங்கு புனித ஜோசப் கல்லூரியில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பேசியதாவது:
நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் குறிப்பாக திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு எனது ஸ்பெஷல் வணக்கம். பெரியார், அண்ணா, எம்ஜிஆர் வழியில் உங்களுக்காக உழைக்க வந்துள்ளேன். இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆதரித்தரித்து இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏன் நாங்கள் கோட்ல சூட் போடக்கூடாதா? அதிகாரம் செலுத்துபவர்கள் தான் கோட், சூட் போட வேணுமா?
நம் மனது போலவே கருப்பு, வெள்ளையில் தான் கோட், சூட் போடுகிறேன், கலர் கலராக ஒன்றும் போடவில்லையே. தேர்தலுக்கு முன்பும் ஒன்றும் செய்யாதவர்கள் இப்போது அதிகாரத்தில் இல்லாமல் சும்மாவே இருக்கிறார்கள். இன்றும் இருசக்திகள் இடையில்தான் போட்டி, ஒன்று தாய சக்தி தவெக. தீய கச்தி திமுக இடையில்தான் போட்டி.
தற்குறி என்று திமுகவினர் கூறினார்கள். தற்குறி என்று கூறிய உங்கள் அரசியல் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிவிட்டனர். அண்ணா ஆரம்பித்த கட்சியை அடிமை கட்சியாக்கிவிட்டு, உடன்பிறப்பே வெளியே வா என்று கூறுகிறார் மு.க. ஸ்டாலின். திமுக தோல்விக்கு வெளியே காரணம் தேடாதீர்கள். உங்கள் வீட்டில் தேடுங்கள். உங்கள் வீட்டில் இருப்பவர்களே திமுக தோல்விக்கு காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.







