மழையைப் போல நம்மைப் பிடிக்காதோர்க்கும் சேர்த்தே நாம் நன்றாற்ற வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழ் திரையுலகிலும், இலக்கிய உலகிலும் நீங்காத இடம்பிடித்துள்ள கவிஞர்களுள் ஒருவர் கவிப்பேரரசு வைரமுத்து. இவர் 50 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி ஏராளமான பாடல்களுக்கு வரிகளை செதுக்கியுள்ளார். அதேபோல், கவிதை, சிறுகதை, நாவல் என எண்ணற்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.
இதையும் படியுங்கள் : தன்னுடைய திருமணத்தில் தானே போட்டோ எடுத்த புகைப்படக் கலைஞர் – வீடியோ இணையத்தில் வைரல்!
கவிஞர் வைரமுத்து அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில், கருத்துக்களையும், கவிதைகளையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் நெற்றித்தீ எனும் தொடரில் பல்வேறு கருத்துக்களை, தனக்கே உண்டான தனித்த நடையில் மக்களிடம் எடுத்துரைக்கிறார்.
https://twitter.com/Vairamuthu/status/1642022949367713792
இந்நிலையில், நெற்றித்தீ தொடரின் 30வது பகுதியை கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ளார். அதில், “ஒவ்வொரு மனிதரையும் பிடித்தவர்கள் கொஞ்சம்; பிடிக்காதோர் அதிகம். நம்மைப் பிடிக்காதோர்க்கும் சேர்த்தே நாம் நன்றாற்ற வேண்டும். தன்னை எதிர்த்துக் குடை பிடிப்பவர்க்கும் சேர்த்தே பெய்கிற மழைமாதிரி. நீங்களும் மழையாகுங்களேன்” என்று தெரிவித்துள்ளார்.







