”நிதானமாக முடிவுகளை எடுக்க வேண்டும்”: தவெக தலைவர் விஜய்க்கு, நடிகர் சிவராஜ்குமார் அறிவுரை..!

கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் நிதானமாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்.

கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் சிவ ராஜ்குமார் இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கரூர் கூட்ட நெரிசல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,

”நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் வரவேற்கத்தக்கது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்.  கரூர் பிரச்சாரத்தில் எதனால் உயிர்பலி நடந்தது என எனக்கு தெரியாது. தமிழ்நாட்டு அரசியல் பற்றியும் எனக்கு அதிகம் தெரியாது. தவெக தலைவர் விஜய் நன்றாக யோசித்து நிதானமாக சில முடிவுகளை எடுக்க வேண்டும். இதனை சக நடிகராகவும் சகோதரனாகவும் சொல்கிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.