சூர்யாவின் ’விஸ்வநாத் & சன்ஸ்’ பட டீசர் வெளியானது……!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் விஸ்வநாத் & சன்ஸ். இப்படத்தை தனுஷின் ‘வாத்தி’, துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய திரைப்படங்களின் இயக்குநரான வெங்கி அட்லுரி இயக்குகிறார். நாகவம்சி தயரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் மமிதா பைஜு, நடிகைகள் ராதிகா சரத்குமார், ரவீனா டண்டன், பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அண்மையில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

 

தொழிலதிபரான சூர்யா தன்னைவிட 20 வயது குறைவான நாயகியின் காதலை ஏற்க மறுப்பதாக டீசரில் காட்டப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.