”கரூர் விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடக்கும் என நம்புகிறேன்”- அன்புமணி ராமதாஸ்..!

கரூர் விவகாரத்தில் அஸ்ரா கார்க் தலைமையில் நேர்மையான விசாரணை நடக்கும் என நம்புவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி இன்று கன்னியாகுமரியில் உள்ள சுவாமிதோப்பு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

கரூர் விவகாரத்தை விசாரிக்கும் அஸ்ரா கார்க் நேர்மையான அதிகாரி. அதனால்  நேர்மையான விசாரணை நடக்கும் என நம்புகிறேன்.

மவுலிவாக்கம் ஆறு வயது சிறுமி கொலை வழக்கில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் போதுமான ஆதாரம் இல்லை என்று குற்றவாளியை விடுதலை செய்துள்ளது. இந்த நாள் நீதியின் கறுப்பு நாளாக உள்ளது. இது போன்ற மனித மிருகங்கள் கடுமையாக தண்டிக்க வேண்டும்.

பழை ஓய்வூதிய திட்டம் குறித்து பல முறை வாக்குறுதி கொடுத்தும் அதனை நிறைவேற்றவில்லை. இது அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.
69 விழுக்காடு இட ஒதுக்கீடு நிறுத்தப்படும் என்ற அச்சம் இருப்பதால் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காமல் திமுக அரசு உள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் 1968 விவசாயிகள் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துள்ளார்கள் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. விவசாயத்தை முழுமையுமாக நாசப்படுத்தி விட்டார்கள்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றம் திமுக ஆட்சியில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியில் சட்டமும் கிடையாது, ஒழுங்கும்  கிடையாது.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று கூறுகிறார்கள் ஆனால் ஊழலில் சிறந்தது தமிழ்நாடாக உள்ளது. 2026 தேர்தல் களம் சூடாக இருக்கும், கூட்டணி சம்பந்தமாக பின்வரும் காலங்களில் முடிவு செய்யப்படும்”

என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.