‘சந்தர்ப்பவாத அரசியல்வாதியின் மகன் நீங்கள்’ – பாஜக மாநில துணைத்தலைவர்

எங்கும் ஊழல், எதிலும் ஊழல், எப்போதும் ஊழல் என்ற கொள்கையில் திமுக உறுதியாக இருக்கும் என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் ட்வீட் செய்துள்ளார். பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில்,…

எங்கும் ஊழல், எதிலும் ஊழல், எப்போதும் ஊழல் என்ற கொள்கையில் திமுக உறுதியாக இருக்கும் என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் ட்வீட் செய்துள்ளார்.

பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், ‘”திமுக தனது கொள்கையில் எப்போதும் உறுதியாக இருக்கும்; பாஜக, ஆர்எஸ்எஸ் உடன் குறைந்தபட்ச சமரசத்தைக் கூட திமுக செய்துகொள்ளாது ; டெல்லிக்குக் காவடி தூக்கவா செல்கிறேன்?கை கட்டி, வாய் பொத்தி உத்தரவு கேட்கவா போகிறேன்?கலைஞர் பிள்ளை நான்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். எங்கும் ஊழல், எதிலும் ஊழல், எப்போதும் ஊழல் என்ற கொள்கையில் திமுக உறுதியாக இருக்கும் என்பதும் அறிவோம்’ எனத் தெரிவித்துள்ள அவர், ஊழலற்ற, நேர்மையான, தேசிய சிந்தனை கொண்ட பாஜகவுடன் சமரசம் செய்து கொள்ள திமுக வால் இயலாது என்பதும் அறிவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘இளைஞர்களுக்கு இணையாக ஆடிய முதியவருக்கு மனைவி கொடுத்த மறக்க முடியாத பரிசு என்ன தெரியுமா?’

மேலும், தமிழினத்தைக் கொன்று குவிக்க உதவிய போது டெல்லி காங்கிரசிடம் திமுக, கை கட்டி, வாய் பொத்தி காவடி தூக்கியது எப்படி என்பதும் தெரியும் எனத் தெரிவித்துள்ள அவர், இந்திரா காந்தி புடவை கட்டிய ஹிட்லர் என்று கூறி விட்டு, நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதி கருணாநிதியின் மகன் நீங்கள் என்பதும் தெரியும் என அவர் அந்த ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.