கோவில் திருவிழா கச்சேரியில் இளைஞர்களுக்கு இணையாக ஆடிய முதியவருக்கு கும்மாங்குத்து கொடுத்த மனைவியின் செயல் அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிளாக்குளம் கிராமத்தில் வெங்கடேச பெருமாள் கோவில் திருவிழா நடந்தது. கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு சினிமா பாடலுடன் கூடிய இன்னிசை கச்சேரி வைக்கப்பட்டது. இதில், இன்னிசை கச்சேரியில் பாடலுக்கு ஏற்ப அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மேடையின் ஒரு பகுதியில் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் இளைஞர்கள் ஆடுவதைப் பார்த்து நாடி நரம்பு எல்லாம் சூடாகி இளைஞர்களுக்கு இணையாக அங்குச் சென்று குத்தாட்டம் போட ஆரம்பித்துள்ளார்.
இதைப் பார்த்த அவருடைய மனைவி அவருடைய பாணியில் எழுந்து நேராகச் சென்று கையை முறுக்கி முதுகில் ஒரு குத்து விட்டு ஓரமா போய் உட்கார் என்று சொல்லி விட்டுச் சென்றுள்ளார். மனைவி கொடுத்த முரட்டுக் குத்து கையை தூக்க முடியாமல் ஓரமாகச் சென்று நின்றுள்ளார் அந்த முதியவர். இதைப் பார்த்த மக்கள் கச்சேரியை மறந்து இவர்களைப் பார்த்துச் சிரித்துள்ளனர். அந்த வீடியோவை சிலர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதால், தற்போது இணையத்தில் பரவலாக அந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது.








