ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
முன்னதாக போட்டியின் 18-வது ஓவரின் போது பந்து ஈரமாகிவிட்டதால், நடுவர்கள் அதை மாற்ற முடிவு செய்தனர். இதனால் களத்தில் இருந்த டிம் டேவிட் மாற்றப்பட்ட புதிய பந்தை தனது கைகளிலேயே வைத்து அதன் தரத்தை பரிசோதித்தார். போட்டியை தொடர்வதற்காக நடுவர்கள் பந்தை மீண்டும் மீண்டும் கேட்டபோதும் அவர் கொடுக்க மறுத்து, பந்தை தனது கையில் வைத்து விளையாடி கொண்டிருந்திருந்தார். இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகியது.
Casual inspection from Tim David after absolute destruction 🔥🥶#IPLRivalryWeek 2026 👉 #MIvRCB | LIVE NOW 👉https://t.co/gLbf9ggQbu | #TATAIPL pic.twitter.com/OumaLMDlYF
— Star Sports (@StarSportsIndia) April 12, 2026
இந்த நிலையில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக பெங்களூரு அணி வீரர் டிம் டேவிட்டுக்கு அவரது போட்டி ஊதியத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ஒரு தகுதிக்குறைப்புப் புள்ளியும் அளித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.







