ஆன்லைன் ரம்மி தடை கேள்விக்குறிதான்; பண பரிமாற்றத்தில் கட்டுப்பாடு விதிக்கலாம் – கார்த்தி சிதம்பரம்

ஆன்லைன் ரம்மிக்கு தடை  என்பது கேள்விக்குறிதான். அதற்கு பதிலாக  பணப் பரிமாற்றத்தில் கட்டுப்பாடு விதிக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் தெரிவித்ததாவது.. ” இந்திய…

ஆன்லைன் ரம்மிக்கு தடை  என்பது கேள்விக்குறிதான். அதற்கு பதிலாக  பணப் பரிமாற்றத்தில் கட்டுப்பாடு விதிக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் தெரிவித்ததாவது..

” இந்திய குடிமக்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் குடியேறலாம். நிரந்தரமாக குடியிருக்கும் மாநிலத்தில் வாக்குகள் செலுத்தும் உரிமை அவர்களுக்கு உண்டு.
வெளிமாநில தொழிலாளர்கள் வராவிட்டால் தமிழகத்தில் பல தொழில்கள் நலிந்து விடும்.
வடநாட்டு தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வரவில்லை என்றால் பரோட்டா கூட கிடைக்காது.

இரட்டை இலை சின்னம் இருக்கும் வரை அதிமுக உயிரோட்டமாகத்தான் இருக்கும். பாஜக நிழலில் இல்லாமல் செயல்பட்டால் அதிமுகவிற்கு எதிர்காலம் உண்டு.

இதனையும் படியுங்கள்: ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் பிணத்தை எடுத்துச் செல்லும் கிராம மக்கள் – தரை பாலம் அமைத்து கோரிக்கை

ஆன்லைன் ரம்மிக்கு தடை  என்பது கேள்விக்குறிதான். அதற்கு பதிலாக  பணப் பரிமாற்றத்தில் கட்டுப்பாடு விதிக்கலாம்” என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.