யோகி பாபுவின் கிரிக்கெட் பேட்டில் தோனியின் ஆட்டோகிராப்

நடிகர் யோகிபாபு தனது கிரிக்கெட் பேட்டில் எம்.எஸ்.தோனியின் கையெழுத்துடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வளைதளங்களில் பகிர்ந்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சிறிய நகைச்சுவை கதாபாத்திரம் மூலம்  தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் யோகி பாபு.  அதன்…

நடிகர் யோகிபாபு தனது கிரிக்கெட் பேட்டில் எம்.எஸ்.தோனியின் கையெழுத்துடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வளைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சிறிய நகைச்சுவை கதாபாத்திரம் மூலம்  தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் யோகி பாபு.  அதன் பின்னர் தனது  நடிப்புத் திறமை, தனித்துவ தோற்றம்,  ஒவ்வொரு டயலாக்கிற்கும் உடனடியாக கவுன்டர் கொடுக்கும் அவரது இயல்பு ஆகியவற்றின் காரணமாக வெள்ளித் திரையிலும் வெற்றிகரமாக முத்திரை பதித்துள்ளார்.

இவர் நடித்த  சூது கவ்வும்,  டிமாண்டி காலனி என அடுத்தடுத்து பார்வையாளர்கள் கவனத்தை ஈர்த்தது. ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்திருந்த இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரிதாக பேசப்பட்டது.  இதனைத் தொடர்ந்து மெர்சல், கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தவிர்க்க முடியாத காமெடியனாக உருவெடுத்தார்.

சினிமாவை தாண்டி கிரிக்கெட் விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட  யோகி பாபு, அதிக நேரங்களில் கிரிக்கெட் மட்டையுடனேயே வலம் வருகிறார்.  மேலும் அவர் அடிக்கடி வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்களை தன் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டும் வந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் தயாரிப்பில் உருவாகவுள்ள முதல் திரைப்படமான “லெட்ஸ் கெட் மேரிட் “ என்ற திரைப்படத்தில் நதியா, ஹரீஸ் கல்யாண், லவ் டுடே புகழ் இவானா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையும் படியுங்கள் : காணாமல் போன செல்லப்பிராணியின் 161 கி.மீ. சுவாரஸ்ய பயணம்!

இந்த நிலையில்  தோனி கையொப்பமிட்டு தனக்கு பரிசளித்த கிரிக்கெட் மட்டையை தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். அதில் ”வாழ்த்துக்கள் யோகி பாபு” என எழுதி தோனியின் கையெழுத்து இடம்பெற்றுள்ளது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.