காணாமல் போன செல்லப்பிராணியின் 161 கி.மீ. சுவாரஸ்ய பயணம்!

காணாமல் போன ரால்ஃப் என்ற நாய் 161 கி.மீ. டாக்சி பயணத்துக்குப் பின்னர் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனில் உள்ள ரெக்ஸம் நகரைச் சேர்ந்த ரால்ஃப் எனும் 3 வயது…

காணாமல் போன ரால்ஃப் என்ற நாய் 161 கி.மீ. டாக்சி பயணத்துக்குப் பின்னர் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

லண்டனில் உள்ள ரெக்ஸம் நகரைச் சேர்ந்த ரால்ஃப் எனும் 3 வயது நாய் அதன் உரிமையாளர் ஜார்ஜ் க்ரூ என்பவருடன் பிப்ரவரி 13ஆம் தேதி காலை 5 மணிக்கு நடைபயணம் சென்றுள்ளது. அப்போது, அதன் உரிமையாளர் மற்றொருவருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அச்சமயம் ரால்ஃப் அங்கிருந்து ஓடியதாக தெரிகிறது.

வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது ரால்ஃப் சாலையில் நின்றிருந்த டாக்சியில் ஏறியுள்ளது. எப்போதும் ரால்ஃப் எங்கேயாவது ஓடுவதும் திரும்பி உரிமையாளரிடம் வருவதும் வழக்கம். ஆனால், இந்த முறை ரால்ஃப் வரவில்லை. இதையடுத்து, அதன் உரிமையாளர் நாயைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும் ஒரு குடும்பத்தினர் சென்ற டாக்சியில், அவர்களுடன் ரால்ஃபும் ஏறியுள்ளது. குளிருக்காக காரில் ஏரிக்கொண்டதாகத் தெரிகிறது. ரால்ஃபின் கழுத்தில் அடையாள அட்டை இல்லாததால் ஓட்டுநரால் உரிமையாளரிடம் நாயைச் சேர்க்க முடியாவில்லை. இருப்பினும் அந்த நாயை சாலையில் விட்டுச் செல்ல மனமில்லாமல் தன்னுடனேயே மான்செஸ்டர் விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதற்கிடையே, நாயின் உரிமையாளர் ரால்ஃப் காணாமல் போனது குறித்து முகநூலில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த டாக்சி ஓட்டுநரின் நண்பர் ஜார்ஜை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதையடுத்து, 161 கி.மீ பயணத்துக்குப் பிறகு ரால்ஃப் அதன் உரிமையாளரிடம் அதே நாளில் 10 மணிக்கு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடைபெறதாவறு ரால்ஃபுக்கு அடையாள பட்டை பொருத்தப்படும் என்று உரிமையாளர் கூறினார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.