மஞ்சள் பை விழிப்புணர்வு இயக்கம்; அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

மஞ்சள் பை விழிப்புணர்வு இயக்கத்தை மீண்டும் தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் நெகிழி பொருட்களுக்கு மாற்றாக மஞ்சள் துணிப்பைகளுக்கு மீண்டும் திரும்பும் வகையில் மக்கள் இயக்கம் தொடங்கப்படும்…

மஞ்சள் பை விழிப்புணர்வு இயக்கத்தை மீண்டும் தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் நெகிழி பொருட்களுக்கு மாற்றாக மஞ்சள் துணிப்பைகளுக்கு மீண்டும் திரும்பும் வகையில் மக்கள் இயக்கம் தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வர்த்தக சங்கங்கள், குடிமக்கள் அமைப்புகள் உள்ளிட்டவை மூலம் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு இயக்கம் செயல்படுத்தப்படும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்போடு பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இந்த திட்டத்தை செயல்படுத்த மாநில, மாவட்ட அளவிலான பணிக்குழுக்களையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உருவாக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.