நெகிழியால் பறவை இனங்கள் அழியும் அபாய நிலை?

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுசூழல் பாதிப்பு காரணமாக நீர்ப்பறவைகள் தனது கூடு கட்டும் முறையை மாற்றியுள்ளதால், பறவை இனங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குன்னூர் பகுதியில் நிலவும் இதமான காலநிலை…

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுசூழல் பாதிப்பு காரணமாக நீர்ப்பறவைகள் தனது கூடு கட்டும் முறையை மாற்றியுள்ளதால், பறவை இனங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குன்னூர் பகுதியில் நிலவும் இதமான காலநிலை காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பறவைகள் இனபெருக்கத்திற்காக குவியத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, இந்தியன் ரோலர், கார்மரண்ட், யுரேஷியன் கூட், மலபார் விஸ்லிங் திரஸ், கிங்பிஷர் உள்ளிட்ட பறவையினங்கள் குன்னூர் பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன.

நீர் நிலைகளில் தாமரைத் தண்டுகள், இலைகள் மற்று நீர்வாழ் தாவரங்களைக் கொண்டு பறவைகள் கூடுகள் கட்டுவது வழக்கம். ஆனால், சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக, பறவைகள் கூடுகட்டும் முறை, தகவமைப்பு, வாழ்வியல் முறை ஆகியவற்றை மாற்றியுள்ளன.

தாவரங்களை கூடுகட்ட பயன்படுத்திய பறவைகள், தற்போது, பிளாஸ்டிக் கழிவுகள், பாலீதீன் பைகள் ஆகியவற்றை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. பறவைகளின் இந்த மாற்றம், இயற்கைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவால் என்றும், இதே நிலை நீடித்தால், நீர்வாழ் பறவைகள் அழிய வாய்ப்புள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.