முக்கியச் செய்திகள் இந்தியா

யஷ்வந்த் சின்ஹாவுக்கு Z பிரிவு பாதுகாப்பு

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு Z பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் பதவிக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார்.

இருவருமே, கடந்த 22ம் தேதி குடியரசுத் தலைவர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு நேற்று முதல் Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஒடிசாவைச் சேர்ந்த 14-16 கமாண்டோ வீரர்களின் பாதுகாப்பு எப்போதும் அவருக்கு இருக்கும்.

தேர்தலுக்கு முன்பாக, ஆதரவு திரட்டுவதற்காக அவர் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும்போதும் இந்த கமாண்டோ வீரர்கள் உடன் செல்வார்கள்.

திரெளபதி முர்முவுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டதை அடுத்து தற்போது யஷ்வந்த் சின்ஹாவுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

யஷ்வந்த் சின்ஹாவுக்கான பாதுகாப்புப் படைப்பிரிவில் ஒவ்வொரு ஷிப்டிலும் 8-10 கமாண்டோக்கள் பணியில் இருப்பார்கள்.

தேர்தலில் ஆதரவு திரட்டுவதற்காக அவர் வெளியே செல்லும்போது கமாண்டோக்களும் உடன் செல்வார்கள்.

தேர்தலுக்குப் பிறகு வெற்றி பெறும் வேட்பாளருக்கு அவர் பதவி ஏற்கும் வரை கமாண்டோ பாதுகாப்பு வழங்கப்படும். அதன் பிறகு குடியரசுத் தலைவருக்கான படைப்பிரிவினர் அவருக்கான பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்குவர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சுசீந்திரம் பழையாற்றில் உடைப்பு : 500 வீடுகளுக்குள் வெள்ளம்!

Ezhilarasan

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்காமல் இருக்க சட்டங்கள் நிறைவேற்றப்படும்;ஆளுநர் உரை

Halley Karthik

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை!

Ezhilarasan