புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உலகையே உலுக்கி வந்தது. இந்தியாவில் மட்டும் 4.32 கோடி பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 5.25 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மார்ச் முதல் வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லாமல் பூஜ்ஜிய நிலையை புதுச்சேரி மாநிலம் அடைந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக புதுச்சேரியில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 36 நபர்களுக்கும், காரைக்காலில் 2 நபர்களுக்கும், ஏனாமில் 4 நபர்களுக்கும் என மொத்தம் 42 நபர்களுக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 182 நபர்கள் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இதுவரை 1,64,065, நபர்கள் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 1,66,209 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,962 நபர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
-ம.பவித்ரா







