யமுனா ஆற்றின் காளிண்டி குஞ்சில் பகுதியில் கடந்த சில தினங்களாக அடர்த்தியான நச்சு நுரை மிதந்துவருகிறது.
கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல் யமுனை ஆற்றில் கலப்பதால் பாஸ்பரஸ் அளவு பல மடங்கு அதிகரித்து நுரை ஏற்படுவதாக என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
யமுனை ஆற்றை பாதுகாக்க டெல்லி அரசு ஒன்பது அம்ச திட்டங்களை உருவாக்கியுள்ளது. ஆனால் தொடர்ச்சியாகக் கடந்த ஆறு ஆண்டுகளாக யமுனா ஆற்றில் நச்சு நுரை மிதப்பது அதிகரித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு யமுனையில் ஓடிய நச்சு நுரையின் புகைப்படங்கள் உலகளாவிய தலைப்புச் செய்தியானது.







