உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நீது காங்கஸ் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் அரையிறுதி சுற்றுக்கான போட்டிகள் நடைபெற்றது. இதில் 48 கிலோ எடை பிரிவில் இன்று நடந்த அரையிறுதி போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை நீது காங்கஸ் மற்றும் கஜகஸ்தான் வீராங்கனை அலுவா பல்கிபெளோவாவை எதிர்த்து விளையாடினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த போட்டியின் முடிவில் நீது 5-2 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார். இதனை அடுத்து இந்திய வீராங்கனை நீது இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதையடுத்து இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் நீது காங்கஸ் மங்கோலிய வீராங்கனை லுட்சிஹன் அட்லெட்செட்கை எதிர்கொண்டார். போட்டி துவங்கியது முதலே நீது காங்கஸ் ஆதிக்கம் செலுத்தினார்.இறுதியில் 5-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் மங்கோலிய வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் நீது காங்கஸ் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். 48 கிலோ எடைப்பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற நீது காங்கஸ்க்கு பல்வேறு தரப்பிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.