4 பவுன் தங்கச் சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு

மதுரை மாவட்டம் , உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த இடத்தில் – கீழே கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு. மதுரை மாவட்டம் , உசிலம்பட்டி…

மதுரை மாவட்டம் , உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற
வந்த இடத்தில் – கீழே கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை உரியவரிடம்
ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு.

மதுரை மாவட்டம் , உசிலம்பட்டி அனைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் சக்திமாரி,
கர்ப்பிணியான இவர் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின்
மகப்பேறு பிரிவில் , சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைக்கு,
செல்லும் போது தான் அணிந்து வந்த 4 பவுன் தங்க சங்கிலியை , கழற்றி
உதவியாளர்களிடம் கொடுத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

பரிசோதனை முடிந்து மீண்டும் வந்து பார்த்த போது, தங்க சங்கிலி பையில்
காணாமல் போனதைக் கண்டு அதிச்சியடைந்தால். இது குறித்து, மருத்துவமனையில்
உள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தன் அடிப்படையில், போலிசார்
விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் , மருத்துவமனை வளாகத்தில் கீழே கிடந்த கைப் பையையும்,
அதில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியையும் கீரிபட்டியைச் சேர்ந்த, பாண்டியம்மாள்
என்பவர் எடுத்து போலிசார் உதவியுடன் சக்திமாரியிடம் ஒப்படைத்தார். மேலும்,
சிகிச்சைக்காக வந்த இடத்தில் கீழே கிடந்த தங்கச் சங்கிலியை எடுத்து , உரியவரிடம்
ஒப்படைத்த பெண்ணிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.